• Sep 29 2024

யாரிடமும் இலஞ்சம் வாங்கவோ, வழங்கவோ வேண்டிய தேவை எமக்கு இல்லை! வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் தெரிவிப்பு SamugamMedia

Chithra / Mar 7th 2023, 6:14 pm
image

Advertisement

நாம் யாரிடமும் இலஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் யாருக்கும் இலஞ்சம் வழங்க வேண்டிய தேவையும் இல்லை என வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நிர்வாக உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் தெரிவித்தார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

மேலும், நாம் நகைச்சுவையாகக் கதைத்த விடயத்தை முன்னாள் சமாசத் தலைவராக இருந்த ஒரு அரசியல் கட்சி சார் உறுப்பினர்  தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்த விடயம் ஒரு மாத காலத்தைக் கடந்த நிலையில் அந்த ஒலிப்பதிவு அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

அந்த ஒலிப்பதிவில் தாடி என எம்முடன் தொழில் புரியும் எமக்கு நன்கறிந்த நபரையே குறிப்பிட்டு நகைச்சுவையாக கதைத்த விடயத்தை, தாடி என குறிப்பிட்டது  கடற்தொழில் அமைச்சரையே என தமது அரசியலுக்காக போலிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் யாரிடமும் இலஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் யாருக்கும் இலஞ்சம் வழங்க வேண்டிய தேவையும் இல்லை. 

அதேவேளை கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகளை நீண்ட காலங்களாக நன்கறிவோம். கடற்தொழில் அமைச்சருக்கும் எமக்குமிடையில் நல்ல இணக்க நிலை உள்ளது. எமக்காக வீட்டுத்திட்டம் மற்றும் மின்சாரம் போன்ற தேவைகளைக் கடந்த காலங்களில்  பூர்த்தி செய்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் எமக்கு தெரிந்த ஒருவரை நகைச்சுவையாக கதைத்த விடயத்தை அமைச்சரை நோக்கி கதைத்ததாக கூறும் விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது.

எனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மழுங்கடிப்பதற்காகவும் ஒரு சில அரசியல் கட்சி சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான விடயங்களில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என்றார்.

யாரிடமும் இலஞ்சம் வாங்கவோ, வழங்கவோ வேண்டிய தேவை எமக்கு இல்லை வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் தெரிவிப்பு SamugamMedia நாம் யாரிடமும் இலஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் யாருக்கும் இலஞ்சம் வழங்க வேண்டிய தேவையும் இல்லை என வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நிர்வாக உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் தெரிவித்தார்.இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும், நாம் நகைச்சுவையாகக் கதைத்த விடயத்தை முன்னாள் சமாசத் தலைவராக இருந்த ஒரு அரசியல் கட்சி சார் உறுப்பினர்  தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்த விடயம் ஒரு மாத காலத்தைக் கடந்த நிலையில் அந்த ஒலிப்பதிவு அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.அந்த ஒலிப்பதிவில் தாடி என எம்முடன் தொழில் புரியும் எமக்கு நன்கறிந்த நபரையே குறிப்பிட்டு நகைச்சுவையாக கதைத்த விடயத்தை, தாடி என குறிப்பிட்டது  கடற்தொழில் அமைச்சரையே என தமது அரசியலுக்காக போலிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.நாம் யாரிடமும் இலஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் யாருக்கும் இலஞ்சம் வழங்க வேண்டிய தேவையும் இல்லை. அதேவேளை கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகளை நீண்ட காலங்களாக நன்கறிவோம். கடற்தொழில் அமைச்சருக்கும் எமக்குமிடையில் நல்ல இணக்க நிலை உள்ளது. எமக்காக வீட்டுத்திட்டம் மற்றும் மின்சாரம் போன்ற தேவைகளைக் கடந்த காலங்களில்  பூர்த்தி செய்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் எமக்கு தெரிந்த ஒருவரை நகைச்சுவையாக கதைத்த விடயத்தை அமைச்சரை நோக்கி கதைத்ததாக கூறும் விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது.எனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மழுங்கடிப்பதற்காகவும் ஒரு சில அரசியல் கட்சி சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான விடயங்களில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement