பண்பாட்டு மையத் திறப்பு விழாவில் தென்னிந்திய நடிகர் நாசர் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை மாவட்டம், மூதூர்_சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம் நூலகம், கலை கூடம் – களரி, ஆவணக் காப்பகம், கணனி கூடம் என எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் திருவாளர் கலாநிதி பாலசிங்கம் சுகுமார் அவர்களின் தலைமையில் இன்று (06) காலை 10.00 மணி அளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 


இந் நிகழ்வில் தென்னிந்திய  நடிகர் நாசர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தோடு கலை கலாசார பண்பாட்டு அலுவல்கள் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர். 


கூத்துக்கள், நாட்டார் இலக்கியங்கள் மற்றும் பண்பாட்டு பாரம்பரிய நிகழ்வுகள் என்று பல நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் அரங்கற்றப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இத்திருவிழாவில் Page Book House நிறுவனம் சார்பில் புத்தக விற்பனை கூடமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை