திட்டங்களை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் – உதுமாலெப்பை

227

விமர்சிக்கும் யாருக்கும் அஞ்சப்போவதில்லை, எமது திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் என சாய்ந்தமருது கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.எம். உதுமாலெப்பை தெரிவித்தார்.

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கம் தன்னுடைய 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி புதிய விற்பனை நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பாக நேற்று (24) காலை சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

சமூக வலைத்தள விமர்சனங்களுக்கும், பதிவுகளுக்கும் பதிலளிப்பதில்லை. அது வேலையற்றவர்களின் வேலை. யாருக்கும் நாங்கள் அஞ்சவும் மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் காலங்களில் இந்த சங்கத்தின் வருமானத்தை கூட்ட கோப் டீ நிலையத்தை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைக்க திட்டமிட்டுள்ள பணிப்பாளர் சபையினர், எதிர்வரும் 28 ஆம் திகதி கோலாகலமாக திறக்க ஆயத்தமாக உள்ளோம்.

சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 பேர்ச் காணியில் மீனவர்களின் நன்மை கருதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றையும், ஐஸ் தொழிற்சாலையையும் நிறுவ திட்டங்களை தயார்படுத்தி வருகிறோம்.

2016 ஆகஸ்ட் மாதத்தில் புதிய நிர்வாகம் இந்த மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை பொறுப்பேற்ற போது மிகவும் வறுமையான சங்கத்தை போன்று குடிநீர், மின்சாரம், தொலைபேசி வசதிகள், போதிய வசதிகளில்லாத கட்டிடம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது குறித்த விடயங்களை கவனத்தில் எடுத்து உடனடியாக அந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

மக்களின் பிரச்சினைகளினதும், தேவைகளினதும் போது நாங்கள் எப்போதும் எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து செயற்திட்டங்களை முன்வைத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையிலான சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகளும் குறிப்பாக காணி விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரியும் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 40 வருடகாலமாக கண்காணிப்பின்றி காணப்படும் நெடுஞ்சாலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: