• Mar 29 2024

பெங்களூர் விமான நிலையத்தில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 11:04 pm
image

Advertisement

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் சிலரை தவறுதலாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


யூ.எல் 173 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக பயணித்த 30 பயணிகள் இவ்வாறான நிலைமை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


எவ்வாறாயினும், குறித்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், அவர்கள் மாறாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில், சிறிது நேரத்தின் பின்னர், குறித்த தவறு தெரியவந்ததையடுத்து, பின்னர், பயணிகள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தநிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பெங்களுர் விமானநிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூர் விமான நிலையத்தில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் சிலரை தவறுதலாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.யூ.எல் 173 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக பயணித்த 30 பயணிகள் இவ்வாறான நிலைமை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.எவ்வாறாயினும், குறித்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், அவர்கள் மாறாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், சிறிது நேரத்தின் பின்னர், குறித்த தவறு தெரியவந்ததையடுத்து, பின்னர், பயணிகள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பெங்களுர் விமானநிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement