திருகோணமலையில் டைனமெட் வைத்திருந்த வைத்தியருக்கு நேர்ந்த கதி..!

172

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும் ஜாவா நகர், கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சிகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு திருகோணமலை கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த தலைமையகப் பொலிஸார், அதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: