• Sep 30 2024

திரையுலகிற்கு என்னாச்சு...மர்மமான முறையில் பிரபல நடிகர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!SamugamMedia

Sharmi / Feb 23rd 2023, 10:50 am
image

Advertisement

கடந்த சில வாரங்களாக திரையுலகினைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தொடர் மரணங்களால் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

இது இவ்வாறு இருக்கும் வேளையில் நேற்றுமுன்தினம் 28வயதான இளம் நடிகர் ஜேன்சன் பனெட்டீர் உயிரிழந்துள்ளார்.


அதாவது பிரபல அமெரிக்க நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜேன்சன் பனெட்டீர். இவர் சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி உள்ளார்.


அந்தவகையில் தனது சகோதரியுடன் 'டைகர் குரூஸ்' என்ற பிரபல டிஸ்னி சேனல் தொடரில் 2004-ம் ஆண்டு நடித்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து பின்னர் 'ஈவன் ஸ்டீவன்ஸ், தி எக்ஸ்.எஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.

மேலும்,  நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழில் முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்னை கொண்ட ஒருவராகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்ததில், அது பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என தெரிய வந்தது. 

மேலும் இவர் பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீரின் சகோதரர் ஆவார். ஜேன்சனின் மரணம் பற்றிய தகவலை ஹெய்டனின் பிரதிநிதியான கேசி கிச்சன் என்பவர் சி.என்.என்னுக்கு அளித்த தகவலின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.


இது குறித்து ஆரஞ்ச்டவுன் காவல் துறை வெளியிட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில்,

"நாங்கள் செல்லும் முன்பே ஜேன்சன் மரணமடைந்து விட்டார். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஜேன்சனை காப்பாற்ற முயற்சித்தபடி காணப்பட்டார். ஜேன்சனுடன் வர்த்தக விசயம் பற்றி பேசுவதற்காக அந்த நண்பர் காத்திருந்துள்ளார். ஆனால், ஜேன்சன் வராத நிலையில், அவரது குடியிருப்புக்கு நண்பர் சென்று உள்ளார். அப்போது ஜேன்சன் நாற்காலி ஒன்றில் எதுவும் பேசாதபடி அமர்ந்து இருந்து உள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும் அதற்கு முந்தின நாள் இரவு ஜேன்சனின் தந்தை ஆலன் தொலைபேசியில் அவருடன் பேசும்போது, நன்றாக பேசியுள்ளார் என போலீசிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜேன்சனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரையுலகிற்கு என்னாச்சு.மர்மமான முறையில் பிரபல நடிகர் உயிரிழப்பு. அதிர்ச்சியில் ரசிகர்கள்.SamugamMedia கடந்த சில வாரங்களாக திரையுலகினைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் குறித்த தொடர் மரணங்களால் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இது இவ்வாறு இருக்கும் வேளையில் நேற்றுமுன்தினம் 28வயதான இளம் நடிகர் ஜேன்சன் பனெட்டீர் உயிரிழந்துள்ளார்.அதாவது பிரபல அமெரிக்க நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜேன்சன் பனெட்டீர். இவர் சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி உள்ளார். அந்தவகையில் தனது சகோதரியுடன் 'டைகர் குரூஸ்' என்ற பிரபல டிஸ்னி சேனல் தொடரில் 2004-ம் ஆண்டு நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து பின்னர் 'ஈவன் ஸ்டீவன்ஸ், தி எக்ஸ்.எஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். மேலும்,  நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழில் முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்னை கொண்ட ஒருவராகவும் இருக்கின்றார்.இந்நிலையில் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்ததில், அது பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என தெரிய வந்தது. மேலும் இவர் பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீரின் சகோதரர் ஆவார். ஜேன்சனின் மரணம் பற்றிய தகவலை ஹெய்டனின் பிரதிநிதியான கேசி கிச்சன் என்பவர் சி.என்.என்னுக்கு அளித்த தகவலின் வாயிலாக உறுதி செய்துள்ளார். இது குறித்து ஆரஞ்ச்டவுன் காவல் துறை வெளியிட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், "நாங்கள் செல்லும் முன்பே ஜேன்சன் மரணமடைந்து விட்டார். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஜேன்சனை காப்பாற்ற முயற்சித்தபடி காணப்பட்டார். ஜேன்சனுடன் வர்த்தக விசயம் பற்றி பேசுவதற்காக அந்த நண்பர் காத்திருந்துள்ளார். ஆனால், ஜேன்சன் வராத நிலையில், அவரது குடியிருப்புக்கு நண்பர் சென்று உள்ளார். அப்போது ஜேன்சன் நாற்காலி ஒன்றில் எதுவும் பேசாதபடி அமர்ந்து இருந்து உள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கு முந்தின நாள் இரவு ஜேன்சனின் தந்தை ஆலன் தொலைபேசியில் அவருடன் பேசும்போது, நன்றாக பேசியுள்ளார் என போலீசிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜேன்சனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement