• Apr 17 2024

லிஸ்டீரியா எனும் பாக்டீரியா – பரவலின் பின்னணி என்ன.?? – உணவு மாதிரிகள் சேகரிப்பு - சன்ன ஜயசுமண விடுத்த கோரிக்கை!SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 3:14 pm
image

Advertisement

உணவு மூலம் பரவும் லிஸ்டீரியா எனும் பாக்டீரியா பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சன்ன ஜயசுமண வலியுறுத்தியுள்ளார்.


அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மையே இந்த நோய் பரவுவதற்கு காரணம் என குற்றம் சுமத்தியிருந்த அவர் பாத யாத்ரீகர்களின் உணவில் விசம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டள்ளார். 



இதன் போது 4 பேர் மரணமடைந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு லிஸ்டீரியா தொற்று ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டியுள்ளார்.


பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுமாறும் சன்ன ஜயசுமண வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில் சிவனொளி பாதமலையை சூழவுள்ள வீதிகளில் உள்ள கடைகளில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் நீர் மாதிரிகளின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


லிஸ்டீரியா எனும் பாக்டீரியாவினால் பீடிக்கப்பட்டு சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் உணவகமொன்றை நடத்தி வந்த வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்.

லிஸ்டீரியா எனும் பாக்டீரியா – பரவலின் பின்னணி என்ன. – உணவு மாதிரிகள் சேகரிப்பு - சன்ன ஜயசுமண விடுத்த கோரிக்கைSamugamMedia உணவு மூலம் பரவும் லிஸ்டீரியா எனும் பாக்டீரியா பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சன்ன ஜயசுமண வலியுறுத்தியுள்ளார்.அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மையே இந்த நோய் பரவுவதற்கு காரணம் என குற்றம் சுமத்தியிருந்த அவர் பாத யாத்ரீகர்களின் உணவில் விசம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டள்ளார். இதன் போது 4 பேர் மரணமடைந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு லிஸ்டீரியா தொற்று ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டியுள்ளார்.பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுமாறும் சன்ன ஜயசுமண வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் சிவனொளி பாதமலையை சூழவுள்ள வீதிகளில் உள்ள கடைகளில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் நீர் மாதிரிகளின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.லிஸ்டீரியா எனும் பாக்டீரியாவினால் பீடிக்கப்பட்டு சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் உணவகமொன்றை நடத்தி வந்த வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement