வாட்ஸ் அப்பில் இல்லாதது அப்படி என்ன சிக்னல் அப்ளிகேஷனில் உள்ளது?

253

உலகம் முழுவதுமே இப்போதைய வைரல் டாக் இது தான். வாட்ஸ் அப் மெசேஞ்சருக்கு மாற்றாக சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன் என்ற ஒரு அப்ளிகேஷன் வந்துள்ளது என்பதுதான் அந்த டாக். சிக்னல் மெசேஞ்சரில் வாட்ஸ் அப்பில் கேட்பது போல தனிப்பட்ட விவரங்களும் கேட்கப்பட்டது

மேலும் எண்டு டூ எண்டு என்க்ரிப்ஷனுக்கும் கேரண்டி என அந்த பேச்சு நீள்கிறது. இதற்கு மேலும் சூடு பிடிக்கும் அளவிற்கு ‘சிக்னல் அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்’ என எலான் மஸ்க் சொல்லியுள்ளார்.

அதென்ன சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன்?

2014இல் இது அறிமுகமாகி இருந்தாலும் இப்போது தான் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களிடம் தனிப்பட்ட விவரங்களை கேட்பது தான் என சொல்லப்படுகிறது. ஆண்ட்ராய்ட், விண்டோஸ், ஐபோன் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் சிக்னலை பயன்படுத்தலாம்.

யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு! டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள கருத்து..!

மேலும் வாட்ஸ் அப்பை போலவே சிக்னலிலும் வாய்ஸ் கால், வீடியோ கால், டெக்ஸ்ட் மற்றும் ஃபைல்ஸ்களை அனுப்பவும் முடியும். அதே போல செய்திகள் தானாகவே மறைகின்ற வசதியும் இதில் உள்ளது. இந்த அப்ளிகேஷனில் குரூப்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே அவர்களை குரூப்பில் சேர்க்க முடியும்.

“பயங்கரவாதிகளாகச் சென்ற யாழ் இளைஞர்கள் அதிரடிப்படை முன்னர் மண்டியிட்டனர்”- அரச ஊடகத்தின் அதர்மத் தலைப்பு

அத்தோடு இந்த அப்ளிகேஷனில் குழுவில் அதிகபட்சமாக 150 நபர்களை சேர்க்கலாம். பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: