தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஏற்பட போகும் நிலை

125

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை 200 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக உயயர்த்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் மக்கள் வெளியே செல்வது அதிகரிக்கும் என்பதால், வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டு உள்ளது.

ஆனாலும் பொது மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருவதால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஊரடங்கு வழிகாட்டல் நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள், பொலிஸார் தலா 200 ரூபா அபராதம் வசூலித்து வந்தனர்.

இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் முகக் கவசம் அணியும் போது, மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை மூடியபடி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.