WhatsApp Calling: பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.
வாட்ஸ் அப் அழைப்புக்கு கட்டணம்: வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் சேட் வசதியை மேம்படுத்துவதற்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறது. அவ்வபோது பல வித அப்டேட்டுகளை கொண்டு வருகின்றது. மீடியா ஃபைல்களை அனுப்புவதும் பெறுவதும் வாட்ஸ்அப்பில் மிகவும் எளிதாகிவிட்டது.
வாட்ஸ்அப்பில் மற்றொரு மிக வலுவான மற்றும் பயனுள்ள அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான் வாட்ஸ்அப் காலிங் அம்சம். இது தற்போது அனைத்து பயனர்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றது.
பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம். இது பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வாட்ஸ்அப் விரைவில் இப்படி செய்யக்கூடும் என தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
வரும் காலத்தில் வாட்ஸ்அப் காலுக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.
வாட்ஸ்அப்பில் காலிங் செய்வது விரைவில் உங்கள் பாக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதைப் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த முடிவு எடுக்கப்பட்டால், இன்னும் சில நாட்களில் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு வாட்ஸ்அப் அழைப்புக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும். இது பயனர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஏனெனில் இன்றைய காலத்தில் சாதாரண காலுக்கு ஈடாக வாட்ஸ்அப் காலையும் பயனர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனினும், வரும் காலங்களில் இது தொடர்பான புதிய விதிமுறைகள் வரக்கூடும் என்று தெரிகிறது.
வாட்ஸ்அப் அழைப்புக்கு பணம் செலுத்துவது பற்றி ஆராயப்படுவதன் பின்னணி என்ன? வாட்ஸ்அப் அழைப்புகள் இலவசமாக கிடைப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த சிம் கார்டு இல்லாமலும் இணையத்தின் உதவியுடன் வாட்ஸ்அப் அழைப்புகளை செய்யலாம். இதனால்தான் இந்த இணைய அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவு குறித்து DoT (டெலிகாம் துறை) TRAI (டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்) இடம் கருத்து கேட்டுள்ளது. இது குறித்து முடிவு எடுக்கப்பட்டால், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் அழைப்புக்கு பெரும் தொகை வசூலிக்கப்படலாம்.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஷாக்: அழைப்புக்கு இனி பணம் வசூலிக்கப்படும் WhatsApp Calling: பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம். வாட்ஸ் அப் அழைப்புக்கு கட்டணம்: வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் சேட் வசதியை மேம்படுத்துவதற்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறது. அவ்வபோது பல வித அப்டேட்டுகளை கொண்டு வருகின்றது. மீடியா ஃபைல்களை அனுப்புவதும் பெறுவதும் வாட்ஸ்அப்பில் மிகவும் எளிதாகிவிட்டது. வாட்ஸ்அப்பில் மற்றொரு மிக வலுவான மற்றும் பயனுள்ள அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான் வாட்ஸ்அப் காலிங் அம்சம். இது தற்போது அனைத்து பயனர்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றது. பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம். இது பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வாட்ஸ்அப் விரைவில் இப்படி செய்யக்கூடும் என தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. வரும் காலத்தில் வாட்ஸ்அப் காலுக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். வாட்ஸ்அப்பில் காலிங் செய்வது விரைவில் உங்கள் பாக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதைப் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவு எடுக்கப்பட்டால், இன்னும் சில நாட்களில் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு வாட்ஸ்அப் அழைப்புக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும். இது பயனர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஏனெனில் இன்றைய காலத்தில் சாதாரண காலுக்கு ஈடாக வாட்ஸ்அப் காலையும் பயனர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனினும், வரும் காலங்களில் இது தொடர்பான புதிய விதிமுறைகள் வரக்கூடும் என்று தெரிகிறது. வாட்ஸ்அப் அழைப்புக்கு பணம் செலுத்துவது பற்றி ஆராயப்படுவதன் பின்னணி என்ன வாட்ஸ்அப் அழைப்புகள் இலவசமாக கிடைப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த சிம் கார்டு இல்லாமலும் இணையத்தின் உதவியுடன் வாட்ஸ்அப் அழைப்புகளை செய்யலாம். இதனால்தான் இந்த இணைய அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவு குறித்து DoT (டெலிகாம் துறை) TRAI (டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்) இடம் கருத்து கேட்டுள்ளது. இது குறித்து முடிவு எடுக்கப்பட்டால், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் அழைப்புக்கு பெரும் தொகை வசூலிக்கப்படலாம்.