ஷங்கிரி லா ஹோட்டலில் தற்கொலைகுண்டு தாக்குதலை மேற்கொண்டவருக்கு இப்படியொரு குணாதிசயம்?

1747

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் பதட்டப்படாதவர் உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஷங்கிரி லா ஹோட்டலில் ஜஹ்ரான் ஹாசிமுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிம் தன்னை வெடிக்கவைத்து சில நிமிடங்களின் பின்னரே இல்ஹாம் தன்னை வெடிக்கவைத்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது சகா உயிருடன் இல்லை என்பதை அறிந்த நிலையிலும் இல்ஹாம் தாக்குதலை துல்லியமாக மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்திய லிப்டிற்கு அருகில் தாக்குதலை மேற்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் தனது வீட்டில் தன்னை வெடிக்கவைத்த இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிவ்ரி எவ்வாறானவர் என ஆணையாளர்கள் உளவியல் சிகிச்சை நிபுணரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த நிலைமையை தெளிவுபடுத்தியுள்ள நெய்ல்பெர்ணான்டோ பாத்திமாக நம்பிக்கையற்ற நிலையில் காணப்பட்டிருக்கவேண்டும்.

தன்னால் அந்த சூழ்நிலையிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்திருக்கவேண்டும் தன்னையும்குழந்தைகளுடன் சேர்த்து வெடிக்கவைப்பதுதான் ஒரேயொரு வழி என அவர் கருதியிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரின் நிலையை முழுமையாக அறியவேண்டும் என்றால் உளவியல் மரணவிசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிலைமையிலும் அவர் தனது நடவடிக்கை குறித்தும் மிகவும் கவனத்துடன் காணப்பட்டதாக தெரிவித்திருந்தார்.