சித்ரா மரணத்தில் மௌனமான ஹெமந்தின் முதல் மனைவி யார் தெரியுமா? உடையும் பின்னணி!

43795

நடிகை சித்ராவின் மறைவு திரையுலக நட்சத்திரங்களுக்கு பேரிழப்பாக காணப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்காக கவலைப்படாதவர்கள் இல்லை.

இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

எனினும், சித்ராவின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதியாகி உள்ளது. அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, நடிகை சித்ராவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

சித்ராவின் மரணத்தில் பல சர்ச்சைகள் காணப்பட்டாலும் தற்பொழுது ஒரு உண்மை வெளியாகி உள்ளது.

சித்ராவின் தோழி ரேகா நாயர் அவரது கணவரை பற்றி பல்வேறு மர்மங்களை வெளிக்கொண்டு வந்தார்.

இன்று வரை சித்ராவின் கணவர் ஹேமந்த் பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் ஏற்கனவே ஹேமந்த் திருமணமானவர் என்பதும் அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை காதலித்து வந்ததாகவும் பின்னர் இவரது சுயரூபம் தெரிந்து அந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.