• Sep 28 2024

யாழ் கலாசார நிலையம் யாருக்கு சொந்தம்? தொடரும் இழுபறி!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 10:00 am
image

Advertisement

இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனவும், 'யாழ்ப்பாண பண்பாட்டு நடுவம்' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை - யாழ்ப்பாண கலாசார நிலையத்தை 'சரஸ்வதி மஹால்' எனப் பெயர்சூட்டவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்த நிலையில், யாழ்.மாநகர சபை இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுக் காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்  தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் சொலமன் சிறில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனும் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவிக்க பிரேரனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒட்டுமொத்தத் தமிழர்களும் கரிநாளாக பிரகடனப்படுத்திய நாளில் இந்தக் கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வை நடத்தி எங்களுடைய முகத்தில் கரியைப் பூசி உள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மாநகரசபை உறுப்பினர் வை. கிருபாகரன் குற்றம்சாட்டினார்.

அத் தோடு இந்தக் கட்டடத்தைக் கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வருக்கு சரியான முறையில் கௌரவம் வழங்கப்படாதது தனக்கும் சபைக்கும் மன வேதனையை ஏற்படுத்தியதாக வை. கிருபாகரன் தெரிவித்தார்.

இதேவேளை- இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கலாசார நிலையம் மாநகரசபையைத் தவிர்த்து வேறு யாரிடமும் வழங்கப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் சபையில் தெரிவித்தார்.

யாழ் கலாசார நிலையம் யாருக்கு சொந்தம் தொடரும் இழுபறிSamugamMedia இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனவும், 'யாழ்ப்பாண பண்பாட்டு நடுவம்' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேவேளை - யாழ்ப்பாண கலாசார நிலையத்தை 'சரஸ்வதி மஹால்' எனப் பெயர்சூட்டவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்த நிலையில், யாழ்.மாநகர சபை இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுக் காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்  தலைமையில் இடம்பெற்றது.இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் சொலமன் சிறில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனும் பிரேரணையை சபையில் முன்வைத்தார். சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவிக்க பிரேரனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஒட்டுமொத்தத் தமிழர்களும் கரிநாளாக பிரகடனப்படுத்திய நாளில் இந்தக் கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வை நடத்தி எங்களுடைய முகத்தில் கரியைப் பூசி உள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மாநகரசபை உறுப்பினர் வை. கிருபாகரன் குற்றம்சாட்டினார். அத் தோடு இந்தக் கட்டடத்தைக் கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வருக்கு சரியான முறையில் கௌரவம் வழங்கப்படாதது தனக்கும் சபைக்கும் மன வேதனையை ஏற்படுத்தியதாக வை. கிருபாகரன் தெரிவித்தார்.இதேவேளை- இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கலாசார நிலையம் மாநகரசபையைத் தவிர்த்து வேறு யாரிடமும் வழங்கப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் சபையில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement