• Sep 29 2024

யாழில் பட்டதாரி மாணவி தவறான முடிவெடுத்து எதற்காக உயிரை விட்டார்? -நடந்தது என்ன? samugammedia

Tamil nila / Jul 29th 2023, 8:21 pm
image

Advertisement

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு தீரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றிரவு (28) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாய் மற்றும் தந்தை ஆகியோர் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது அப்பகுதி மக்களை மிகுந்த துயர் த்தில் ஆழ்த்தியுள்ளது.


யாழில் பட்டதாரி மாணவி தவறான முடிவெடுத்து எதற்காக உயிரை விட்டார் -நடந்தது என்ன samugammedia பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு தீரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றிரவு (28) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாய் மற்றும் தந்தை ஆகியோர் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவமானது அப்பகுதி மக்களை மிகுந்த துயர் த்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement