• Apr 20 2024

சிவப்பு நிற பழங்களை ஏன் அதிகமாக சாப்பிட வேண்டும்?

Tamil nila / Jan 17th 2023, 7:10 pm
image

Advertisement

பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு உகந்தது என ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.


ஒரு நாளைக்கு குறைந்தது 5-9 பழங்கள் வரையாவது சாப்பிட வேண்டுமாம். ஒரே வகையான பழங்களை எடுத்துக் கொள்ளாமல் பல்வேறு வண்ணங்களில் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 


குறிப்பாக சிவப்பு நிற பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்களான லைக்கோபீன் மற்றும் ஆந்தோசயினின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது இதய நோய்கள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. 


அந்த வகையில் பார்க்கும் போது நாம் உண்ண வேண்டிய சில சிவப்பு நிற பழங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.


01. ஸ்ட்ராபெர்ரி 


ஸ்ட்ராபெர்ரி


ஸ்ட்ராபெர்ரியில் போலேட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்களான விட்டமின் சி காணப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். 


02. செர்ரி பழங்கள்


உடல்


செர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இவற்றில் விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. இது நம்முடைய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


03. தர்பூசணி 


தர்பூசணியில் 92 சதவீதம் அளவிற்கு தண்ணீர் காணப்படுகிறது. பீட்டா கரோட்டீன், விட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகளவில் காணப்படுகிறது. லைக்கோபீன் கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. 


04. மாதுளை 


மாதுளையில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. க்ரீன் டீ மற்றும் ரெட் வொயின் ஆகியவற்றை விட மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்கள் 3 மடங்கு அதிகம். புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்க உதவுகிறது.


05. ஆப்பிள் 


நைட்


ஆப்பிளில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின் சி காணப்படுகிறது. இந்த இரண்டுமே நம்ம ஆரோக்கியத்திற்கும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.


சிவப்பு நிற பழங்களை ஏன் அதிகமாக சாப்பிட வேண்டும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு உகந்தது என ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.ஒரு நாளைக்கு குறைந்தது 5-9 பழங்கள் வரையாவது சாப்பிட வேண்டுமாம். ஒரே வகையான பழங்களை எடுத்துக் கொள்ளாமல் பல்வேறு வண்ணங்களில் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிவப்பு நிற பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்களான லைக்கோபீன் மற்றும் ஆந்தோசயினின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது இதய நோய்கள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது நாம் உண்ண வேண்டிய சில சிவப்பு நிற பழங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.01. ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரிஸ்ட்ராபெர்ரியில் போலேட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்களான விட்டமின் சி காணப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். 02. செர்ரி பழங்கள்உடல்செர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இவற்றில் விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. இது நம்முடைய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.03. தர்பூசணி தர்பூசணியில் 92 சதவீதம் அளவிற்கு தண்ணீர் காணப்படுகிறது. பீட்டா கரோட்டீன், விட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகளவில் காணப்படுகிறது. லைக்கோபீன் கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. 04. மாதுளை மாதுளையில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. க்ரீன் டீ மற்றும் ரெட் வொயின் ஆகியவற்றை விட மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்கள் 3 மடங்கு அதிகம். புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்க உதவுகிறது.05. ஆப்பிள் நைட்ஆப்பிளில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின் சி காணப்படுகிறது. இந்த இரண்டுமே நம்ம ஆரோக்கியத்திற்கும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement