ஆளும் தரப்பினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத பாதுகாப்பு அமைச்சர் எதற்கு? பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
பாதுகாப்பு விவகாரத்தில் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என எதிர்தரப்பின் பிரதம கொறொடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற கூட்டம்தொடரின் போது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியல் கட்டளையை ஒத்தி வைத்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரம் முன்வைத்த யோசனையை உறுதிப்படுத்தி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 42ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
பொது மக்கள் பாதுகாப்பிற்கும், நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு இருப்பதை அவதானிக்க முடிகிறது.
சமூக கட்டமைபில் கடந்த ஒருமாத காலமாக இடம்பெறும் சம்வங்களை கொண்டு ஜனாதிபதி சுமார் 30 தடவைகளுக்கும் மேலாக தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் தரப்பினரினதும், எதிர் தரப்பினரது பாதுகாப்பை கூட உறுதிப்படுத்த முடியாத பாதுகாப்பு அமைச்சர் எதற்கு.
பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் சபாநாயகர் பதவி அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பரிமாண மாற்றத்தை தொடர்ந்து சபாநாயகர் பதவி பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாற்றமடைந்தது. ஆகவே சபாநாயகர் என்ற ரீதியில் சகல உறுப்பினர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.
பிற செய்திகள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்