• Apr 20 2024

தொழிற்சங்கங்கள் ஏன் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்-ரணிலிடம் கேள்வி! SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 1:07 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியம் அரச வருமானத்தை கூட்டுமாறே அரசாங்கத்திடம் கோரியதாகவும் மாறாக வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரவில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் கேம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தன.

இந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு நகரில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

தேறிய இலாபத்தை கூட்டுவதற்கு இலகுவான வழி செலவீனங்களை குறைப்பது என தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் அமைச்சர்கள் இதற்கு ஏன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை மீட்பதற்காக மக்களை அர்பணிப்பு செய்யுமாறு கோரும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அவர்களின் சம்பளங்களை குறைத்துள்ளனர் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தாங்கள் வரி செலுத்த மாட்டோமென குறிப்பிடவில்லை என தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் நியாயமான வரியினை விதிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் தொழிற்சங்கங்களை கலந்துரையாடுமாறு ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்ததாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தள்ளார்.

தொழிற்சங்கங்கள் ஏன் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்-ரணிலிடம் கேள்வி SamugamMedia சர்வதேச நாணய நிதியம் அரச வருமானத்தை கூட்டுமாறே அரசாங்கத்திடம் கோரியதாகவும் மாறாக வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரவில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் கேம்குமார் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தன.இந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு நகரில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.தேறிய இலாபத்தை கூட்டுவதற்கு இலகுவான வழி செலவீனங்களை குறைப்பது என தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் அமைச்சர்கள் இதற்கு ஏன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டை மீட்பதற்காக மக்களை அர்பணிப்பு செய்யுமாறு கோரும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அவர்களின் சம்பளங்களை குறைத்துள்ளனர் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.தாங்கள் வரி செலுத்த மாட்டோமென குறிப்பிடவில்லை என தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் நியாயமான வரியினை விதிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் தொழிற்சங்கங்களை கலந்துரையாடுமாறு ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்ததாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement