பிறந்த நாளன்று மனைவி மரணம்! கொலையா? தற்கொலையா?

57

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருகியுள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாடுவதும் அதனை மற்றவர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் முறையல்ல என்று கணவன் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல் பரபரபப்பாக பரவி வருகின்றது.

மேலும் சென்னை எருக்கஞ்சேரி இந்திராநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா. இவர் வழக்கறிஞராகவும், திமுகவில் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழன் பிரச்சன்னாவுக்கு நதியா(35) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்கள்.

எனினும் இந்த நிலையில், வீட்டில் நதியாவின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் கணவர் தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

உடனே, நதியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு மகளின் இறப்பு தொடர்பாக நதியாவின் தந்தையான ரவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனடிப்படையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து கணவரான தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: