• Apr 24 2024

சவுதியில் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான மனைவி...! கண்ணீருடன் கணவர் விடுத்துள்ள கோரிக்கை samugammedia

Chithra / May 26th 2023, 5:24 pm
image

Advertisement

சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்று தற்போது நிர்க்கதியாகியுள்ள தனது மனைவியை நாட்டுக்கு அழைத்து வர உதவுமாறு நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்த, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காத நிலையில் தனது மனைவி அங்கு சிரமப்படுவதாகவும் அவரை நாட்டுக்கு அழைத்து வருமாறும் கொஹெம்ப, திகன, செல்லகதிர்காம பகுதியில் வசிக்கும் குறித்த கணவன் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக எனது மனைவி கடந்த மாதம் கொழும்பில் உள்ள முகவர் நிறுவனமொன்றின் உதவியுடன் சவூதி அரேபியா சென்ற போதும் அங்கு வேலை கிடைக்கவில்லை.

அவர் தற்போது சவுதி அரேபியாவின் முகவர் நிறுவனத்துக்கு சொந்தமான அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அந்த  அறையில் சுமார் 10 பெண்கள் இருப்பதாகவும், தம்மை விரைவில் காப்பாற்றுமாறும் எனது மனைவி செய்தி அனுப்பியுள்ளார் என அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும்,  வெளிநாட்டுக்கு சென்று வீடு கட்ட பணம் அனுப்புவதாக தனது மனைவி கூறி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சவுதியில் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான மனைவி. கண்ணீருடன் கணவர் விடுத்துள்ள கோரிக்கை samugammedia சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்று தற்போது நிர்க்கதியாகியுள்ள தனது மனைவியை நாட்டுக்கு அழைத்து வர உதவுமாறு நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்த, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காத நிலையில் தனது மனைவி அங்கு சிரமப்படுவதாகவும் அவரை நாட்டுக்கு அழைத்து வருமாறும் கொஹெம்ப, திகன, செல்லகதிர்காம பகுதியில் வசிக்கும் குறித்த கணவன் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக எனது மனைவி கடந்த மாதம் கொழும்பில் உள்ள முகவர் நிறுவனமொன்றின் உதவியுடன் சவூதி அரேபியா சென்ற போதும் அங்கு வேலை கிடைக்கவில்லை.அவர் தற்போது சவுதி அரேபியாவின் முகவர் நிறுவனத்துக்கு சொந்தமான அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அந்த  அறையில் சுமார் 10 பெண்கள் இருப்பதாகவும், தம்மை விரைவில் காப்பாற்றுமாறும் எனது மனைவி செய்தி அனுப்பியுள்ளார் என அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும்,  வெளிநாட்டுக்கு சென்று வீடு கட்ட பணம் அனுப்புவதாக தனது மனைவி கூறி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement