• Apr 19 2024

மத்திய மலையகத்தில் காட்டு மிருகங்கள் படையெடுப்பு - பீதீயில் பொதுமக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 6:15 pm
image

Advertisement

குளவி.சிறுத்தை.பன்றி, நரி, குரங்கு .விஷ பாம்புகள்.அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது.


மத்திய மலைநாட்டில் உள்ள பல் வேறு பெருந்தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதற்கு பீதி ஏற்பட்டுள்ளது.


 தற்போது பெருந்தோட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மிகவும் வேதன குறைவால் நகர் பகுதியில் பணி புரிய செல்வதால் பெருந் தோட்டங்கள் யாவும் வன பகுதியாகும் நிலையில், 

காட்டு மிருகங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. தினமும் காட்டு மிருகங்கள் இந்த தேயிலை தோட்டங்களை நோக்கி படையெடுத்து மேய்ந்து வருகின்றன.


இந்த நிலையில் குறித்த தேயிலை மலையில் கொழுந்து பரிப்பதற்காக நாளாந்தம் பணிக்கு செல்லும் தோட்ட தொழிலாளர் ஆண் ,பெண்கள் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது.


அத்துடன் மழைக்காலங்களில் பணிமூட்டம் ஏற்படும்  போது வனப்பகுதியில் இருந்து படையெடுத்து வரும் காட்டு எருமைகளினால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக தேயிலை மலைகளில் வளர்ந்து உள்ள கொழுந்தை பரிக்க முடியாது தொழில் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வருமானத்திலும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு, காட்டு மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசாங்கம் உடன் வன பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு பல படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மத்திய மலையகத்தில் காட்டு மிருகங்கள் படையெடுப்பு - பீதீயில் பொதுமக்கள் SamugamMedia குளவி.சிறுத்தை.பன்றி, நரி, குரங்கு .விஷ பாம்புகள்.அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டில் உள்ள பல் வேறு பெருந்தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதற்கு பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது பெருந்தோட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மிகவும் வேதன குறைவால் நகர் பகுதியில் பணி புரிய செல்வதால் பெருந் தோட்டங்கள் யாவும் வன பகுதியாகும் நிலையில், காட்டு மிருகங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. தினமும் காட்டு மிருகங்கள் இந்த தேயிலை தோட்டங்களை நோக்கி படையெடுத்து மேய்ந்து வருகின்றன.இந்த நிலையில் குறித்த தேயிலை மலையில் கொழுந்து பரிப்பதற்காக நாளாந்தம் பணிக்கு செல்லும் தோட்ட தொழிலாளர் ஆண் ,பெண்கள் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது.அத்துடன் மழைக்காலங்களில் பணிமூட்டம் ஏற்படும்  போது வனப்பகுதியில் இருந்து படையெடுத்து வரும் காட்டு எருமைகளினால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக தேயிலை மலைகளில் வளர்ந்து உள்ள கொழுந்தை பரிக்க முடியாது தொழில் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வருமானத்திலும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு, காட்டு மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும்.தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசாங்கம் உடன் வன பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு பல படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement