கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது!

65

மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளமையுடன், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கைக்குண்டு வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுக் காலை இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: