உளவளத்துணை ஆசிரியர்களுக்கான செயலமர்வு!(படங்கள் இணைப்பு)

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் மண்முனை தென்மேற்கு பிரிவு பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள உளவளத்துணை ஆசிரியர்களுக்கான செயலமர்வு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி டினேஷ் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் நிலை மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் நிலை சமீப காலங்களாக குறைவடைந்து உள்ளமை, மாணவர்கள் ஒழுங்கீனமாக பாடசாலைக்கு வருகை தருதல், மன அழுத்தங்களினால் பாதிக்கப்படுதல் இவற்றினை அடிப்படையாக கொண்டு பாடசாலையில் இணைக்கப்பட்ட உளவளத்துணை ஆசிரியர்களுக்கு மாணவர்களை எவ்வாறு ஆரோக்கியமான கற்றல் செயற்பாடுகளில் உள்வாங்குதல் தொடர்பான விடயங்கள் அடங்கிய செயலமர்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார் மட்டக்களப்பு மத்தி உளவளத்துணை சேவைக்கால ஆலோசகர் தா.குணரெத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இச்செயலமர்வினை மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர்வீ.குகதாசன் மற்றும் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.சசிதரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை