• Apr 20 2024

IPLயை விட உலகக்கோப்பை முக்கியமானது- கவுதம் காம்பீர்!!

Tamil nila / Jan 4th 2023, 10:54 pm
image

Advertisement

IPL கிரிக்கெட் தொடரை விட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர், இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதற்கிடையே, IPL கிரிக்கெட் தொடர் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.


உலகக்கோப்பை தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை BCCI தயார் செய்துள்ளது. இந்நிலையில் IPL மற்றும் உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது- விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள். அணியை வெற்றி பெறச் செய்யும் திறமை இவர்களுக்கு உண்டு.


இந்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால் T20 போட்டிகளில் இருந்து ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். கடந்த 2 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அதற்கு முன்பாக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த தவறை இந்த முறை நாம் செய்து விடக் கூடாது.


நன்றாக விளையாடக் கூடிய 11 வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னரே அடையாளம் காணப்பட வேண்டும். உலகக்கோப்பையை மனதில் வைத்து IPL கிரிக்கெட் தொடரை தேவைப்பட்டால் முக்கிய வீரர்கள் தவிர்க்கலாம்.இதனால் IPL அணிகள் பாதிக்கப்பட நேர்ந்தாலும் ஒரு பிரச்னையுமில்லை. அணிகள் பாதிக்கட்டும். இந்திய அணிதான் முக்கியமே தவிர்த்து IPL அணிகள் அல்ல. இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் பெரிய சாதனையாக அமையும். ஒவ்வொரு ஆண்டும் IPL தொடர் நடைபெறும். உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். என்னை பொறுத்தவரையில் IPL தொடரில் வெற்றி பெறுவதை விடவும் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

IPLயை விட உலகக்கோப்பை முக்கியமானது- கவுதம் காம்பீர் IPL கிரிக்கெட் தொடரை விட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர், இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதற்கிடையே, IPL கிரிக்கெட் தொடர் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.உலகக்கோப்பை தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை BCCI தயார் செய்துள்ளது. இந்நிலையில் IPL மற்றும் உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது- விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள். அணியை வெற்றி பெறச் செய்யும் திறமை இவர்களுக்கு உண்டு.இந்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால் T20 போட்டிகளில் இருந்து ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். கடந்த 2 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அதற்கு முன்பாக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த தவறை இந்த முறை நாம் செய்து விடக் கூடாது.நன்றாக விளையாடக் கூடிய 11 வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னரே அடையாளம் காணப்பட வேண்டும். உலகக்கோப்பையை மனதில் வைத்து IPL கிரிக்கெட் தொடரை தேவைப்பட்டால் முக்கிய வீரர்கள் தவிர்க்கலாம்.இதனால் IPL அணிகள் பாதிக்கப்பட நேர்ந்தாலும் ஒரு பிரச்னையுமில்லை. அணிகள் பாதிக்கட்டும். இந்திய அணிதான் முக்கியமே தவிர்த்து IPL அணிகள் அல்ல. இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் பெரிய சாதனையாக அமையும். ஒவ்வொரு ஆண்டும் IPL தொடர் நடைபெறும். உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். என்னை பொறுத்தவரையில் IPL தொடரில் வெற்றி பெறுவதை விடவும் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement