தொலைக்காட்சி திரையில் இனி சுவையை அறியலாம்

309

தொலைக்காட்சியின் திரையில் தோன்றும் உணவுப்பொருட்களை நக்கி அவற்றின் சுவையை அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா கண்டுபிடித்துள்ளார்.

டேஸ்ட் தி டிவி என்று அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி திரையின் மீது ஹைஜீன் ஃபிளிம் என்று அழைக்கப்படும் ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.

இதன் மூலம் சுவையை நக்கி உணர்ந்து கொள்ள முடியும் என பேராசிரியர் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்த படியே உலகின் மறு முனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தை சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் இது போன்ற தொழில்நுட்பம் மூலம் வெளி உலகத்துடன் தொடர்பு மேற்கொள்ளுவதை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.