வாய்ப்புகளை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்! துனித் வெல்லாலகே

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கிரிக்கட் தொடர்களில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் புதிதாக களமிறக்கப்பட்டிருந்தார்.

அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ‘வாய்ப்புகள் அமையாது அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்’ என்று துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

நேற்றிடம்பெற்ற ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

எனினும் குறித்த போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை