உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்..!

231

உலகளவில் கொடிய தொற்றுப் பரவல் நோயாக, பல கோடி மக்களின் உயிர் பலி எடுத்து வருகின்ற கொரோனா வைரஸ் இன்னும் இரு மாதங்களில் ஒருவருடத்தை பூர்த்தி செய்யவுள்ளது.

ஆனாலும் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றை தடுப்பதற்கோ, அழிப்பதற்கோ முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும், கொரோனா தொற்று குறித்த பல்வேறு ஆய்வுகளை வல்லரசு நாடுகளும் போட்டி போட்டு ஆய்வறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தியவாறே உள்ளன.

அந்தவகையிலே கொரோனா வைரஸ் நாணயத் தாள்களிலும், கைத்தொலைபேசி மேற்பரப்பிலும் 28 நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்போன் ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவலைத் தடுக்கவும், ஆபத்தை குறைக்கும் நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.

எனவே இவ்வாறான பொருட்களை கையாளும் போது கூடிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்திக் கொள்வது நம்மை மட்டுமல்லாது பிறர் மீதும் நோய்த் தொற்று பரவுதலை தவிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.