யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் கடந்த 16ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்போது வீட்டில் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொழும்புத்துறை பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், குறித்த வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும், ஒரு தொகை பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது: கையடக்கத் தொலைபேசியும் பணமும் மீட்பு. samugammedia யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கடந்த 16ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்போது வீட்டில் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது. அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொழும்புத்துறை பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், குறித்த வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும், ஒரு தொகை பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.