உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் சேவை!

113

உலகின் முன்னணி நிறுவனமான யூடியூப் மக்கள் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் யூடியூப்பில் பிரச்சனை ஏற்பட்டால் பயனாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்களும் எளிதாக கையாளக்கூடிய செயலியாக யூடியூப் இருப்பதால், பெரும்பாலானோர் யூடியூப் தளத்தையே விரும்புகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை யூடியூப் தளம் முடங்கியது.

இந்நிலையில் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றுவதில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

அனைவருக்கும் இவ்வாறான பிரச்சனை இல்லை என்றாலும் கூட, வீடியோ சரியாக வேலை செய்யாமல் காணப்பட்டால் அது தங்கள் தரப்பு தொழில்நுட்ப கோளாறு என யூடியூப் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

யூடியூப் மட்டுமல்லாமல், கூகுள் டிவி உள்ளிட்ட யூடியூப் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தும் பிற சேவைகளிலும் சிக்கல் நிலவுகிறது. இணையதளம் வேலை செய்தால் கூட, வீடியோ பதிவேற்றுவதில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், சரி செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டதை அடுத்து, பிறகு சிறிது நேரத்தில் வழக்கம் போல் யூடியூப் இயங்க ஆரம்பித்தது.

உலக முழுவதும் யூடியூப் இணைய தளத்தில் பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.