வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோன்!

22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் தனது தூரத்தை ஓடி எடுத்த நேரம் 10.14 வினாடிகள் ஆகும்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான எஃப்42-44/61-64 தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கையின் பாலித ஹல்கஹவெல கெதர வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை