புதுடெல்லியிலிருந்து, இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழிநுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது இயந்திரத்தில் தீப்பற்றி எரியும் அபாயம் நிலவியதால் எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார்.
விமானம் தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கினார்.
விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.
பயணிகளுக்குத் தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு; ஏர் இந்தியா விமானம் அவசரத் தரையிறக்கம் புதுடெல்லியிலிருந்து, இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழிநுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது இயந்திரத்தில் தீப்பற்றி எரியும் அபாயம் நிலவியதால் எச்சரிக்கை மணி ஒலித்தது.இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். விமானம் தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கினார். விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். பயணிகளுக்குத் தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.