• Apr 04 2025

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பரிதாபமாக உயிரிழப்பு..!

Chithra / Feb 4th 2024, 10:43 am
image

 

கண்டி, தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர்  நேற்று (03) பிற்பகல்  உயிரிழந்துள்ளனர்.

தண்ணேகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ராகலையிலிருந்து தண்ணேகும்பு நோக்கிச் சென்ற வானுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 68 மற்றும் 62 வயதுடைய கணவன் மனைவியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பரிதாபமாக உயிரிழப்பு.  கண்டி, தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர்  நேற்று (03) பிற்பகல்  உயிரிழந்துள்ளனர்.தண்ணேகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ராகலையிலிருந்து தண்ணேகும்பு நோக்கிச் சென்ற வானுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 68 மற்றும் 62 வயதுடைய கணவன் மனைவியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement