• Dec 05 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை கட்டுப்பாடு - ஆய்வு செய்யப்படும் அறிக்கை

Chithra / Dec 4th 2024, 8:16 am
image

  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று இதனை அறிவித்துள்ளார்.

அமைச்சர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில், ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். 

அவர்களின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

சில சலுகைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதை பரிசீலித்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை கட்டுப்பாடு - ஆய்வு செய்யப்படும் அறிக்கை   நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று இதனை அறிவித்துள்ளார்.அமைச்சர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில், ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். அவர்களின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.சில சலுகைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதை பரிசீலித்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement