• Feb 16 2026

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 வரவேற்பு நிகழ்வு!

dileesiya / Jan 23rd 2026, 5:59 pm
image

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் எம்.எம்.அன்பஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


அயல் பாடசாலைகளில் இருந்து தரம் 6 இற்கு புதிதாக இணைந்து கொண்ட 55 மாணவர்களையும், தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மலர் கொத்து கொடுத்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்றிருந்ததுடன், மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.


மாணவர்களின் முதல் நாள் வரவை உறுதிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வரட்ணம், சர்வோதயா அமைப்பின் வவுனியா முகாமையாளர் ஜே.எம்.மாஹிர் அயல் படசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 வரவேற்பு நிகழ்வு வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.பாடசாலையின் அதிபர் எம்.எம்.அன்பஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.அயல் பாடசாலைகளில் இருந்து தரம் 6 இற்கு புதிதாக இணைந்து கொண்ட 55 மாணவர்களையும், தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மலர் கொத்து கொடுத்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்றிருந்ததுடன், மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.மாணவர்களின் முதல் நாள் வரவை உறுதிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வரட்ணம், சர்வோதயா அமைப்பின் வவுனியா முகாமையாளர் ஜே.எம்.மாஹிர் அயல் படசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement