• Nov 26 2024

நீங்கள் தரும் பிரியாணி எமக்கு தேவையில்லை...!நிரந்தரமான தீர்வு ஒன்றே எமக்கு வேண்டும்...! வர்ணகுலசிங்கம் வேண்டுகோள்...!

Sharmi / Mar 28th 2024, 6:19 pm
image

எங்களுடைய வளங்களை நீங்கள் பாதுகாத்து தந்தாலே நாங்கள் அந்நியச் செலாவணியை பெற்றுத்தருவோம் அது தவிர நீங்கள் தரும் பிரியாணி போன்றவை எங்களுக்கு தேவையில்லை என  வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்களின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் இன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் கட்டுவதற்காக இந்தியா சென்றுள்ளார்.

நாங்கள் இன்று கஞ்சிக்கே வழி இல்லாமல் இருக்கிறோம். 

உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து நீங்கள் இப்படி பாலம் கட்டுவது எங்களுக்கு தேவையில்லை. 

ஏனென்றால் நீங்கள் சரியான முறையில் எங்களின் வளங்களை பாதுகாத்து இந்தியா படகுகளை எல்லை தாண்டாமல் மறித்து எங்களுடைய வளங்களை பாதுகாத்தாலேயே எங்களுடைய வளத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீனைப் பிடித்து நாங்கள் உண்மையாக அந்நியச் செலாவணியை நாங்கள் பெற்றுத்தருவோம்.

இந்த அரசாங்கம் அதற்குரிய பாதுகாப்பை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிச்சை எடுத்து தான் நாங்கள் வங்குரோத்தில் போயிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு பிரியாணி வாங்கித்தருகிறேன்,அது வாங்கித்தருகிறேன், இது வாங்கித்தருகிறேன் என ஆசையை காட்டலாம். எங்களுக்கு அது எல்லாம் தேவை  இல்லை. எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வே வேண்டும் என வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் தரும் பிரியாணி எமக்கு தேவையில்லை.நிரந்தரமான தீர்வு ஒன்றே எமக்கு வேண்டும். வர்ணகுலசிங்கம் வேண்டுகோள். எங்களுடைய வளங்களை நீங்கள் பாதுகாத்து தந்தாலே நாங்கள் அந்நியச் செலாவணியை பெற்றுத்தருவோம் அது தவிர நீங்கள் தரும் பிரியாணி போன்றவை எங்களுக்கு தேவையில்லை என  வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.வடமராட்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் இன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் கட்டுவதற்காக இந்தியா சென்றுள்ளார்.நாங்கள் இன்று கஞ்சிக்கே வழி இல்லாமல் இருக்கிறோம். உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து நீங்கள் இப்படி பாலம் கட்டுவது எங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் சரியான முறையில் எங்களின் வளங்களை பாதுகாத்து இந்தியா படகுகளை எல்லை தாண்டாமல் மறித்து எங்களுடைய வளங்களை பாதுகாத்தாலேயே எங்களுடைய வளத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீனைப் பிடித்து நாங்கள் உண்மையாக அந்நியச் செலாவணியை நாங்கள் பெற்றுத்தருவோம்.இந்த அரசாங்கம் அதற்குரிய பாதுகாப்பை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பிச்சை எடுத்து தான் நாங்கள் வங்குரோத்தில் போயிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு பிரியாணி வாங்கித்தருகிறேன்,அது வாங்கித்தருகிறேன், இது வாங்கித்தருகிறேன் என ஆசையை காட்டலாம். எங்களுக்கு அது எல்லாம் தேவை  இல்லை. எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வே வேண்டும் என வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement