முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
தனது முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டார தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், சுகீஷ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியிருந்தார். அத்துடன், அவர் புதிய மக்கள் முன்னணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் விசேட கருத்திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலப்பகுதியில், 220 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணி என்ன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் ஆஜராகியுள்ளார். தனது முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டார தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், சுகீஷ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியிருந்தார். அத்துடன், அவர் புதிய மக்கள் முன்னணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.இவர் விசேட கருத்திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலப்பகுதியில், 220 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மேலும், இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.