இலங்கையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்துக்கும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கான செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வீடுகளை நிர்மாணிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படக்கூடும்.
ஏற்கனவே நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், சீமெந்து விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் புதிய அதிகரிப்பு கட்டுமானத் துறையினருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளுக்கு அடுத்த சுமை - சீமெந்து விலையில் புதிய மாற்றம் இலங்கையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இந்த விலை அதிகரிப்பானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்துக்கும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலைத் திருத்தம் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கான செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, வீடுகளை நிர்மாணிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படக்கூடும்.ஏற்கனவே நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், சீமெந்து விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் புதிய அதிகரிப்பு கட்டுமானத் துறையினருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.