• Nov 09 2026

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரங்கள் தொடர்பில் விசேட விவாதம் கோரும் மொட்டு கட்சி!

Chithra / Nov 9th 2026, 10:42 am
image


பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு விசேட விவாதங்களை நடத்துவதற்கு தலையிடுமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


குறித்த கடிதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ளார்.


இதன்படி, பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்கள், சில சட்ட அமுலாக்க நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் கடிதத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.


அத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான விளக்கங்கள் அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் காரணமாக இந்த முக்கியமான விவகாரங்கள் தொடர்பான கவனம் திசைதிரும்பக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தாமதமின்றி குறித்த இரண்டு விவாதங்களையும் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரங்கள் தொடர்பில் விசேட விவாதம் கோரும் மொட்டு கட்சி பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு விசேட விவாதங்களை நடத்துவதற்கு தலையிடுமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.குறித்த கடிதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ளார்.இதன்படி, பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்கள், சில சட்ட அமுலாக்க நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் கடிதத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான விளக்கங்கள் அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் காரணமாக இந்த முக்கியமான விவகாரங்கள் தொடர்பான கவனம் திசைதிரும்பக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தாமதமின்றி குறித்த இரண்டு விவாதங்களையும் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement