செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உலகளவில் ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2027ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணமாக மெமரி சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்படுகிறது.
சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் சேவைகளை இயக்கும் தரவு மையங்களுக்கு அதிக அளவிலான மெமரி சிப்கள் தேவைப்படுகின்றன. இதனால் ஏ.ஐ. நிறுவனங்கள் அதிகளவில் சிப்களை கொள்முதல் செய்வதால், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கும் சிப்களுக்கான தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படுகின்றன.
அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் 20 டொலராக இருந்த குறிப்பிட்ட மெமரி சிப்பின் விலை தற்போது 60 முதல் 65 டொலர் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கமாக ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2026ஆம் ஆண்டில் சுமார் 106.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 91.1 கோடியாகக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் விலை 30 சதவீதம் வரை உயருமா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உலகளவில் ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 2027ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முக்கியக் காரணமாக மெமரி சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்படுகிறது. சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் சேவைகளை இயக்கும் தரவு மையங்களுக்கு அதிக அளவிலான மெமரி சிப்கள் தேவைப்படுகின்றன. இதனால் ஏ.ஐ. நிறுவனங்கள் அதிகளவில் சிப்களை கொள்முதல் செய்வதால், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கும் சிப்களுக்கான தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படுகின்றன.அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் 20 டொலராக இருந்த குறிப்பிட்ட மெமரி சிப்பின் விலை தற்போது 60 முதல் 65 டொலர் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கமாக ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 2026ஆம் ஆண்டில் சுமார் 106.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 91.1 கோடியாகக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.