புத்தளம் - ஏத்தாளை பகுதியில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் அடங்கிய லொரியொன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்றைக் கண்காணித்து சோதனை செய்தனர்.
இதன்போது , இலங்கையில் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், குறித்த பொருட்களை கொண்டு செல்ல பயண்படுத்தப்பட்ட லொறியொன்றுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் லொரி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
புத்தளத்தில் பெருந் தொகையான இரசாயன பொருட்களுடன் ; ஒருவர் கைது புத்தளம் - ஏத்தாளை பகுதியில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் அடங்கிய லொரியொன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்றைக் கண்காணித்து சோதனை செய்தனர். இதன்போது , இலங்கையில் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.மேலும், குறித்த பொருட்களை கொண்டு செல்ல பயண்படுத்தப்பட்ட லொறியொன்றுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் லொரி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.