• Jul 29 2025

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

Chithra / Jul 29th 2025, 8:20 am
image


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதுமனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன் போது, நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement