கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 இடைத்தங்கல் முகாம்களில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 பேர் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
2098 குடும்பங்களைச் சேர்ந்த 6570 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகளின் நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றது.
அத்துடன் தற்பொழுது அதிகமான குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதாகவும், புகைமூட்டம் போல் காட்சி அளிப்பதுடன் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் 11728 பேர் பாதிப்பு - 25 வீடுகள் சேதம் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 இடைத்தங்கல் முகாம்களில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 பேர் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.2098 குடும்பங்களைச் சேர்ந்த 6570 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகளின் நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றது.அத்துடன் தற்பொழுது அதிகமான குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதாகவும், புகைமூட்டம் போல் காட்சி அளிப்பதுடன் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.