• Apr 18 2026

தொண்டமனாறு நன்னீரகம் திட்டத்தினால் 1272 குடும்பங்கள் பாதிப்பு - வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு..!

shanu / Apr 2nd 2026, 12:45 pm
image

தொண்டமனாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


தொண்டமனாற்றை அண்மித்த பகுதிகளை நன்னீர் ஆக்கும் திட்டத்தினால் மீனவ மற்றும் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.


மழை காலங்களில் ஆச்சுவேலி தம்பாலை உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் தெனக்கும்போது அவர்கள் அந்த நீரை வெளியேற்றுவதற்காக கடலிற்குள் நீர் செல்ல கூடிய வழிவகைகளை மேற்கொள்வார்கள். 


தற்போது கடலிற்கு நீர் செல்ல முடியாதவாறு வான் கதவுகள் மூடிக் காணப்படுவதனால் விவசாயம் கூட செய்கை பண்ண முடியாதவாறு நீர் மட்டம்  உயர்ந்து  காணப்படுகிறது. இதனால் விவசாயமும்  செய்கை பண்ண முடியாத நிலமை காணப்படுகிறது. குறித்த நல்ல தண்ணீர் திட்டம் ஆரம்பித்த  நாளிலிருந்து 1272  நன்னீர் மீனவ குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த நன்னீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை எனில் தை, மாசி, பங்குனி மாதங்களில் அதிகளவான இறால் குறைந்த விலையில் விற்பனை ஆவதாகவும் ஆனால் குறித்த திட்டம் ஆரம்பிக்க பட்ட  நாளிலிருந்து இறால் உற்பத்தி இல்லை என்றும், கடல் நீரும் நன் நீரும் கலக்கும் போதுதான் இறால் உற்பத்தி ஆகும் என்றும் ஆறு அடைக்க பட்டமையால் நன்னீர் மீன்பிடி முற்று முழுதாக பாதிக்க பட்டுள்ளதாகவும் உரியவர்கள் கவனமெடுத்து நன் நீர் மீன்பிடியாளர்களின் பொருளாதாரத்தை மேம் படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தொண்டமனாறு நன்னீரகம் திட்டத்தினால் 1272 குடும்பங்கள் பாதிப்பு - வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு. தொண்டமனாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொண்டமனாற்றை அண்மித்த பகுதிகளை நன்னீர் ஆக்கும் திட்டத்தினால் மீனவ மற்றும் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.மழை காலங்களில் ஆச்சுவேலி தம்பாலை உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் தெனக்கும்போது அவர்கள் அந்த நீரை வெளியேற்றுவதற்காக கடலிற்குள் நீர் செல்ல கூடிய வழிவகைகளை மேற்கொள்வார்கள். தற்போது கடலிற்கு நீர் செல்ல முடியாதவாறு வான் கதவுகள் மூடிக் காணப்படுவதனால் விவசாயம் கூட செய்கை பண்ண முடியாதவாறு நீர் மட்டம்  உயர்ந்து  காணப்படுகிறது. இதனால் விவசாயமும்  செய்கை பண்ண முடியாத நிலமை காணப்படுகிறது. குறித்த நல்ல தண்ணீர் திட்டம் ஆரம்பித்த  நாளிலிருந்து 1272  நன்னீர் மீனவ குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த நன்னீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை எனில் தை, மாசி, பங்குனி மாதங்களில் அதிகளவான இறால் குறைந்த விலையில் விற்பனை ஆவதாகவும் ஆனால் குறித்த திட்டம் ஆரம்பிக்க பட்ட  நாளிலிருந்து இறால் உற்பத்தி இல்லை என்றும், கடல் நீரும் நன் நீரும் கலக்கும் போதுதான் இறால் உற்பத்தி ஆகும் என்றும் ஆறு அடைக்க பட்டமையால் நன்னீர் மீன்பிடி முற்று முழுதாக பாதிக்க பட்டுள்ளதாகவும் உரியவர்கள் கவனமெடுத்து நன் நீர் மீன்பிடியாளர்களின் பொருளாதாரத்தை மேம் படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement