• Sep 14 2026

வயிற்றில் 13 கொக்கைன் உருண்டைகள்; கட்டுநாயக்கவில் சிக்கிய உகண்டா பிரஜை

Chithra / Sep 14th 2026, 9:54 am
image


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டார் சென்றடைந்து, பின்னர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


இதன்பின்னர், மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது, அவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.


மேலும், சந்தேகநபர் விழுங்கியுள்ளதாகக் கூறப்படும் எஞ்சிய கொக்கைன் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, அவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வயிற்றில் 13 கொக்கைன் உருண்டைகள்; கட்டுநாயக்கவில் சிக்கிய உகண்டா பிரஜை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என தெரியவந்துள்ளது.சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டார் சென்றடைந்து, பின்னர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்பின்னர், மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, அவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.மேலும், சந்தேகநபர் விழுங்கியுள்ளதாகக் கூறப்படும் எஞ்சிய கொக்கைன் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, அவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement