• May 23 2026

இலங்கையில் கழிப்பறை வசதியற்ற 13,326 குடும்பங்கள்!

Aathira / Nov 3rd 2025, 6:50 pm
image

இலங்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் உள்ள 61,11,315 குடும்ப அலகுகளில் 0.2% குடும்பங்கள்  (13,326 குடும்பங்கள்) இன்னும் கழிப்பறை வசதியின்றி வாழ்ந்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் பதிலாகக் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளைப் பயன்படுத்துகின்றன.

அவற்றில் 92.2% குடும்பங்கள் தனிப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன என்றும்,

5.8% குடும்பங்கள் பகிரப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 0.2% குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளையும்,

கொழும்பு மாவட்டத்தில் சுமார் 4,518 குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன, 

அதே நேரத்தில் 207 குடும்பங்களுக்கு எந்தவிதக் கழிப்பறை வசதியும் இல்லாமல் உள்ளனர். 

அத்துடன் கழிப்பறைகளைப் பகிர்ந்துகொள்வதில் நுவரெலியா மாவட்டம் அதிக விகிதத்தை (5.2%) கொண்டுள்ளது. 

இந்த விவரங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சுகாதார சவால்கள் மற்றும் கழிப்பறை வசதியின்மையை வெளிப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இலங்கையில் கழிப்பறை வசதியற்ற 13,326 குடும்பங்கள் இலங்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் உள்ள 61,11,315 குடும்ப அலகுகளில் 0.2% குடும்பங்கள்  (13,326 குடும்பங்கள்) இன்னும் கழிப்பறை வசதியின்றி வாழ்ந்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் பதிலாகக் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளைப் பயன்படுத்துகின்றன.அவற்றில் 92.2% குடும்பங்கள் தனிப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன என்றும்,5.8% குடும்பங்கள் பகிரப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 0.2% குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளையும்,கொழும்பு மாவட்டத்தில் சுமார் 4,518 குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் 207 குடும்பங்களுக்கு எந்தவிதக் கழிப்பறை வசதியும் இல்லாமல் உள்ளனர். அத்துடன் கழிப்பறைகளைப் பகிர்ந்துகொள்வதில் நுவரெலியா மாவட்டம் அதிக விகிதத்தை (5.2%) கொண்டுள்ளது. இந்த விவரங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சுகாதார சவால்கள் மற்றும் கழிப்பறை வசதியின்மையை வெளிப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement