2 கோடியே 07 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த 14 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை 01.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 'பதிக் எயார்' நிறுவனத்துக்குச் சொந்தமான LD-297 என்ற விமானம் மூலம் இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது, அவர்கள் கொண்டுவந்த 14 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பிலான 138,200 சிகரெட்டுகளைக் கொண்ட 691 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சீனப் பயணிகளைத் தங்களது காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 14 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது 2 கோடியே 07 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த 14 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை 01.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 'பதிக் எயார்' நிறுவனத்துக்குச் சொந்தமான LD-297 என்ற விமானம் மூலம் இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இதன்போது, அவர்கள் கொண்டுவந்த 14 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பிலான 138,200 சிகரெட்டுகளைக் கொண்ட 691 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சீனப் பயணிகளைத் தங்களது காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.