• Apr 02 2025

Tharmini / Dec 5th 2024, 10:37 am
image

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் - 145வது நினைவு தினம் , வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள நினைவு சிலையடியில் நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.    

இந் நிகழ்வில் ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும், அவர் தொடர்பான நினைவுரைகளை பாடசாலை மாணவர்களும், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர். 

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த சிலையானது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி தரிப்பிடத்தினால் பரமாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





வவுனியாவில் ஆறுமுகநாவலரின் - 145ஆவது நினைவு தினம் வவுனியாவில் ஆறுமுகநாவலரின் - 145வது நினைவு தினம் , வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள நினைவு சிலையடியில் நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.    இந் நிகழ்வில் ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அவர் தொடர்பான நினைவுரைகளை பாடசாலை மாணவர்களும், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர். முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.குறித்த சிலையானது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி தரிப்பிடத்தினால் பரமாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement