வெகுவிரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அணியிலிருந்து 16 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்கவுடன் இணையப் போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில் பல கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக முன்னதாகவே அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மையான அரசியல் பிரமுகர்கள் இந்த கட்சி தாவலை மேற்கொள்வார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் மிகவும் ரகசியமாக ரணிலின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் தலைமையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவல்கள், புதிய வேட்பாளர்கள் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் என ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சஜித் அணியிலிருந்து 16 பேர் ரணிலுடன். கட்சித் தாவல் தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் வெகுவிரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அணியிலிருந்து 16 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்கவுடன் இணையப் போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில் பல கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக முன்னதாகவே அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.இவ்வாறான சூழலில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மையான அரசியல் பிரமுகர்கள் இந்த கட்சி தாவலை மேற்கொள்வார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.இது தொடர்பான கலந்துரையாடல்கள் மிகவும் ரகசியமாக ரணிலின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் தலைமையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தாவல்கள், புதிய வேட்பாளர்கள் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் என ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.