• May 21 2026

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு; 148 பேர் மாயம்

Chithra / Jan 7th 2026, 12:52 pm
image


 இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 148 பேர் காணாமல் போயுள்ளனர். 

 

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. 

 

இதன் காரணமாக, வடக்கு சுலாவெசி மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. 

 

வெள்ள நீரானது சேறு, பாறைகள் மற்றும் மர இடிபாடுகளை அடித்துக்கொண்டு வந்ததால், மக்கள் தப்பித்துச் செல்ல அவகாசமின்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 

 

இந்த இயற்கை அனர்த்தத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 148 பேரைக் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார். 


இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


இதேவேளை சிதாரோ (Sitaro ) மாவட்டத் தலைவர் சின்டியா இங்க்ரிட்  கலங்கிட் (Chyntia Ingrid Kalangit) மீட்பு  நடவடிக்கைகளுக்காக 14 நாள் அவசரக் காலத்தை பிறப்பித்துள்ளார்.


இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு; 148 பேர் மாயம்  இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 148 பேர் காணாமல் போயுள்ளனர்.  இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதன் காரணமாக, வடக்கு சுலாவெசி மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின.  வெள்ள நீரானது சேறு, பாறைகள் மற்றும் மர இடிபாடுகளை அடித்துக்கொண்டு வந்ததால், மக்கள் தப்பித்துச் செல்ல அவகாசமின்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.  இந்த இயற்கை அனர்த்தத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 148 பேரைக் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சிதாரோ (Sitaro ) மாவட்டத் தலைவர் சின்டியா இங்க்ரிட்  கலங்கிட் (Chyntia Ingrid Kalangit) மீட்பு  நடவடிக்கைகளுக்காக 14 நாள் அவசரக் காலத்தை பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement