• Nov 23 2024

கனடா ஸ்கார்பரோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு - 16 வயது மாணவன் உயிரிழப்பு

Chithra / Jun 16th 2024, 2:25 pm
image


கனடா - ஸ்கார்பாரோவில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்   16 வயதுடைய சிறுவன்  சுட்டு கொல்லப்பட்டதாக  டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளார்.

வார்டன் அவென்யூ மற்றும் கேடராகி  பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் டொராண்டோவைச் சேர்ந்த ஜமால் அப்தினாசிர் என்ற சிறுவனே  குறித்த துப்பாக்கிச் சூட்டிற்குள்ளாகி உயிரிழந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என அங்குள்ள ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. 


பாதிக்கப்பட்ட சிறுவன் அப்தினாசிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்  சிகிச்சைகள் பலனின்றி  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த  மாணவன்  நகரின் கிழக்கு முனையில் உள்ள பிரெஞ்சு கத்தோலிக்க பள்ளியில் கல்வி கற்றுவருகிறார்.  குறித்த மாணவனின் மரணம் பற்றி கல்லூரி அதிபர் "இந்த மரணம் முழு பள்ளி சமூகத்தையும் பாதிப்பதாக . கவலையுடன் தெரிவித்துள்ளார் 

க்ளென்டோவர் எனப்படும் பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும்.சுமார் 4 துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர் 


குறித்த  சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள்  பொலிசாருக்கு  அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு  பொலிசார்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


கனடா ஸ்கார்பரோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு - 16 வயது மாணவன் உயிரிழப்பு கனடா - ஸ்கார்பாரோவில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்   16 வயதுடைய சிறுவன்  சுட்டு கொல்லப்பட்டதாக  டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளார்.வார்டன் அவென்யூ மற்றும் கேடராகி  பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் டொராண்டோவைச் சேர்ந்த ஜமால் அப்தினாசிர் என்ற சிறுவனே  குறித்த துப்பாக்கிச் சூட்டிற்குள்ளாகி உயிரிழந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.மேலும் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என அங்குள்ள ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுவன் அப்தினாசிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்  சிகிச்சைகள் பலனின்றி  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த  மாணவன்  நகரின் கிழக்கு முனையில் உள்ள பிரெஞ்சு கத்தோலிக்க பள்ளியில் கல்வி கற்றுவருகிறார்.  குறித்த மாணவனின் மரணம் பற்றி கல்லூரி அதிபர் "இந்த மரணம் முழு பள்ளி சமூகத்தையும் பாதிப்பதாக . கவலையுடன் தெரிவித்துள்ளார் க்ளென்டோவர் எனப்படும் பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும்.சுமார் 4 துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர் குறித்த  சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள்  பொலிசாருக்கு  அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு  பொலிசார்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement