முள்ளிப்பொத்தானை பகுதியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக தனது சகோதரரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் 17 வயது இளைஞர் தூக்கில் சடலமாக மீட்பு முள்ளிப்பொத்தானை பகுதியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக தனது சகோதரரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.